இன்று ஒரு செய்தியை படிக்க நேர்தபொழுது மிகுந்த மகிழ்ச்சி அடைதேன்.
மாற்றுதிறன் கொண்டவர்களுக்கு சென்னை மாநகராட்சி பல வழிகளில் உதவி செய்கிறது . இது அனைத்து நகராட்சி,பேரூராட்சி,ஊராட்சி,தாலுகா மற்றும் ஆனைத்து பள்ளி,கல்லூரி களுக்கும் எடுத்துச் செல்லப் பட வேண்டும்.
என்னுடன் ஸ்ரீராஜ் (பெயர் மற்ற பட்டுள்ளது) என்ற மற்று திறன் கொண்ட மாணவன் படித்தான்.
மிகவும் சிரமமான காரியம் தினமும் பள்ளி வருவது,அன்றாட தர்மங்களை கடைபிடிப்பது,தன்னை உணர்த்து உதவி செய்பவர்களிடம் மட்டும் உதவி பெற்று,முடித்தவரை தனலனவற்றை தானே செய்து கொண்டு,கலுவரி படித்து பட்டம் பெற்று நன்றாக இருக்கிறான்.
என்னைபொறுத்தவை அவன் தன என்றும் என் ரோல் மாடல்!
பாராட்டுவோம், முடித்தவரை நம்மல் ஆன உதவியை செய்வோம்!
மாற்றுத்திறன் உடையோருக்கான உரிமைகளை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்போம் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கூறி உள்ளார்.
இது குறித்து முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
திரைப்படத்துறையினர் 6-2-2010 அன்று நடத்திய நன்றி பாராட்டு விழாவில், நடன இயக்குனரும், நடிகருமான தம்பி லாரன்ஸ் ராகவேந்திரா இருபதுக்கு மேற்பட்ட குழந்தைகளை அழைத்து வந்து மேடையிலே நிறுத்தி, அவர்களுக்கெல்லாம் "இளஞ்சிறார் இதய பாதுகாப்பு திட்ட''த்தின் மூலமாக அரசால் அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை உதவிகளையெடுத்து விளக்கியதையும், அந்த குழந்தைகளே சிலர் தங்களின் நிலைமைகளை நெஞ்சு நெகிழ எடுத்துரைத்ததைக் கண்டேன்.
அதன் தொடர்ச்சியாக; வழக்கம்போல் இன்று காலையில் "கலைஞர் தொலைக்காட்சி''யில் தம்பி சுப.வீரபாண்டியனின் "ஒரு சொல் கேளீர்'' எனும் சொற்சித்திரத்தைக் காணவும் கேட்கவுமான வாய்ப்பைப் பெற்றேன். உடல் ஊனமுற்றோருக்காக ஏதோ சொல்லப்போகிறார் என அறிந்தவுடன், முழுப் பேச்சையும் கேட்கலாம் என்று அமர்ந்திருந்தேன்.
உடல் ஊனமுற்றோருக்கான உதவிகள் செய்வதற்கு தொண்டு நிறுவனங்கள் பல முன்வந்துள்ள நிலையிலும் - அரசினரும் அந்த பணியினை மேற்கொண்டுள்ள நிலையிலும் சுப.வீரபாண்டியனின் இந்த கருத்துக்கோவை என்னை மிகவும் கவர்ந்தது.
"மாற்றுத்திறன் உடையவர்களுக்கான பணிகள் தற்போது உரிமை அடிப்படையில் செயல்பட்டு வருகின்றது. இனியும் அவர்களுக்கு இலவச சைக்கிள் கொடுப்பது, தொண்டு இல்லத்தில் வைத்துப் பராமரிப்பது போன்ற பணிகளை மட்டுமே அரசோ, அரசு சாரா நிறுவனங்களோ செய்து கொண்டிருக்கக்கூடாது. அதையும் தாண்டி அவர்களின் உரிமைகளை நிலை நாட்டிட அனைத்து துறைகளிலும் அவர்களின் பங்களிப்பை உறுதி செய்யவும், அதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தருவதற்கும் பாடுபட வேண்டும். அவர்கள் அரசிடம் இருந்து எந்த இலவசங்களையும் எதிர்பார்க்கவில்லை. அவர்களுக்கென இயற்றப்பட்டிருக்கும் சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். அந்த சட்டத்தின் ஆட்சியின்படியே அவர்களது உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்று கோருகிறார்கள்'' என்று அவர் குறிப்பிட்டார்.
அவருடைய அந்த பேச்சில் குறிப்பிட்ட ஐ.நா. மன்றம் இயற்றிய சட்டம்-2007ன் விவரங்களை வாங்கிப் படித்துப் பார்த்தேன். ஆம், அவ்வாறு ஒரு சட்டம் ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்டபோது, அந்த சட்டத்தையேற்று கையெழுத்திட்ட நாடுகளில் ஏழாவது நாடாக இந்தியா இடம் பெற்றிருப்பதும் தெளிவாயிற்று.
அந்த சட்டத்தின் தொடர்பாக காட்டப்பட்டுள்ள ஊனமுற்றோர், எண்ணிக்கை, இந்திய நாட்டின் மொத்த மக்கள் தொகையில் இரண்டு விழுக்காடு என்றும் - தமிழ்நாட்டில் அவர்களுடைய எண்ணிக்கை 18 லட்சம் பேர் என்றும் அறிந்துகொள்ள முடிந்தது.
உடல் ஊனமுற்றோர் என்ற பட்டியலில் மனித சமுதாயத்தில் காது கேளாதவராய் - கண் தெரியாதவராய் - வாய் பேச முடியாதவர்களாய் - கைகால்களைப் பயன்படுத்த இயலாதவர்களாய் - மன நோயாளிகளாய் உள்ள அனைவருமே இடம் பெறுகிறார்கள். இவர்களை, குறிப்பிட்ட அவயவங்களைப் பயன்படுத்த முடியாதவர்கள் என்று ஒதுக்கிவிடாமல் - அல்லது ஒரு தனிப் பட்டியலில் சேர்த்து விடாமல், இழித்துரைப்பது போல் இன்று தோன்றுகிற குருடர், செவிடர், நொண்டி, ஊனம், முடம் என்றெல்லாம் அவர்களை அழைக்காமல் - பொதுவாக "ஊனமுற்றோர்'' என்பதற்கு பதிலாக ஒரு அவயவத்தின் செயல்பாட்டுக் குறையால் அவர்களுடைய மற்றொரு திறன் மேலும் ஒரு பங்கு சிறப்புறுகிறது என்ற அடிப்படையில் - அவர்களை "மாற்றுத்திறனாளிகள்'' என்று அழைக்கின்ற முறை சில ஆண்டுகளுக்கு முன்பே அதாவது 2007-ம் ஆண்டிலேயே ஐக்கிய நாடுகள் சபையிலே விவாதிக்கப்பட்டு அதன் தொடர்பாகத்தான் அந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
இப்போதும் அந்த மக்களுடைய கோரிக்கைகளாக பின்வருவன இருக்கின்றன. அவர்கள் எந்த கோரிக்கைகளையும் பெறுவதற்கு யாசகங்கள் கேட்கும் பாணியில் கை நீட்டவில்லை; கை நீட்டக் கூடாது என்பதே எனது கருத்துமாகும்.
1. மாற்றுத்திறனுடையோருக்கான ஐக்கிய நாடுகள் சாசனத்தை இந்தியாவில் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
2. அனைத்து துறைகளிலும் வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு அளிப்பதுடன் அனைத்து துறையின் வளங்களிலும் 3 சதவிகிதத்தை மாற்றுத்திறன் உடையோரின் வளர்ச்சிக்காக செலவிட வேண்டும்.
3. மாற்றுத்திறன் உடையோரின் அரசியல் உரிமைகளை நிலைநாட்டிட அவர்களுக்கு மாநில சட்டமன்றத்திலும், பாராளுமன்றத்திலும் (மக்களவை, மாநிலங்களவை) 3 சதவிகித இட ஒதுக்கீடு உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
4. மாநிலத்திலும், மத்திய அரசிலும் மாற்றுத்திறனுடையோருக்கான அமைச்சகம் உருவாக்கப்படவேண்டும். தனியாக அமைச்சரும் வேண்டும். (தமிழ்நாட்டில் மதிய உணவு திட்டத்துடன் இணைத்து ஊனமுற்றோர் நல்வாழ்வு என்பதனை மாற்றி மாற்றுத்திறன் உடையோர்களுக்கென தனியான அமைச்சகம் அமைக்க வேண்டும்).
5. அரசு பள்ளிகள், கல்லூரிகள் குறைந்துவிட்ட நிலையில் தனியார் பள்ளிகளில், கல்லூரிகளில் பயிலும் மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவியருக்கு உதவித்தொகை வழங்கப்பட வேண்டும்.
6. உடனடியாக நாடெங்கிலும் வீடு வீடாகச் சென்று மாற்றுத்திறன் உடையோரின் கணக்கெடுப்பை நிகழ்த்த வேண்டும். இந்த தகவல்களை முறையாக கணினி மயப்படுத்தி பாதுகாக்கவேண்டும்.
7. மாற்றுத்திறன் உடையோருக்கு வழங்கப்பட்டிருக்கும் தேசிய அடையாள அட்டை முழுமையான ஏற்பு ஆவணமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு உதவியைப் பெறவும், பணியைப் பெறவும், உதவும் உபகரணங்களைப் பெறவும் தனித் தனியான மருத்துவ சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், ஆகியவற்றைக் கேட்கக்கூடாது.
8. பதினைந்து இலக்க மின்னணு அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும். இதன் மூலமாகவே அனைத்து சேவைகளையும், நலத் திட்டங்களையும் அளிக்க வேண்டும்.
9. மாற்றுத்திறன் உடையோரின் குடும்ப வருமானத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு அரசின் உதவிகள், நலத்திட்டங்கள் மறுக்கப்படுகின்றன. பதினெட்டு வயது பூர்த்தியான மாற்றுத்திறன் உடையோரின் குடும்ப வருமானத்தை கணக்கில் எடுக்காமல் அவரது தனி நபர் வருமானத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டு அரசின் உதவிகள் வழங்கப்பட வேண்டும். குடும்ப வருமானத்தைக் காரணமாகக் காட்டி தற்பொழுது பலருக்கும் எந்த விதமான உதவிகளும் கிடைப்பதில்லை.
10. ஊனமுற்றோருக்கான சட்டம் 1995 (சம வாய்ப்பு, உரிமை பங்கேற்பு)ன்படி பதினைந்து ஆண்டுகளுக்கான மொத்தமான வேலை வாய்ப்பு இட ஒதுக்கீட்டை உடனடியாக மத்திய-மாநில அரசுகள் வழங்கிட வேண்டும்.
மாற்றுத்திறன் உடையோருக்கான சமூக, பொருளாதார, அரசியல் உரிமைகளைப் பெறுவதில் அனைத்து மக்களும் தங்களது ஆதரவினை வழங்க வேண்டும். கல்வியாளர்கள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் ஊடகங்கள் இதை முன்னெடுக்க வேண்டும். இவைகள் எல்லாம் அவர்களுடைய கோரிக்கைகளாக இருக்கின்றன.
நான் முதலிலே சொன்னபடி கோரிக்கைகள் அல்ல - "உரிமையை வலியுறுத்தல்'' என்று எடுத்துக்கொண்டு, அவர்களுக்குரிய வாய்ப்புகளை அளிப்பதற்கு மத்திய அரசோடு தொடர்பு கொண்டு இந்த அரசின் மூலமாக தகுந்த முறையில் மாற்றுத்திறன் உடையோருக்கான துன்பங்களைத் துடைக்கலாம்- அவர்களை எல்லோரையும் போல சமமாக உயர்த்தலாம் என்ற கருத்தை நமது அரசின் மூலமாக மத்திய அரசுக்கு எடுத்துச் சொல்லி அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கலாம் என்று கருதுகிறேன்.
ஐ.நா. மன்றம் இயற்றிய சட்டத்தின்படி, சில முக்கிய சலுகைகள் குறிப்பாக எல்லாவற்றிலும் அவர்களுக்கு உரிய சதவிகிதம் அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முதற்கட்டமாக நாம் பரிசீலித்து, அவர்களுக்கு, தோராயமாக மனித நேய உணர்வுடன் அரசின் சார்பில் வழங்குகின்ற உதவிகளுக்கு பதிலாக அவர்கள் கோரும் உரிமையை நிலை நாட்ட குறிப்பிட்ட சதவிகித அளவு வாய்ப்புகளை அளிப்பதற்கு மத்திய அரசுடன் தொடர்பு கொள்ள வேண்டும். மத்திய அரசும் இதற்கு இணங்கி 2007-ம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மத்திய சாசனத்தில் ஏழாவது நாடாக கையெழுத்திட்டதை நினைவிலே வைத்துக்கொண்டு ஆவன செய்யும் - அனுகூலமான முடிவையெடுக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.
இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி கூறி உள்ளார்.
Monday, March 1, 2010
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment