Saturday, February 27, 2010

சுதந்திரம் அடகு வைக்கபடுகிறது அமெரிக்காவிடம்!

கடந்த வாரம் ஒரு செய்தியை படித்தபொழுது மிகவும் அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் இருந்தது. அச்சமில்லை அச்சமில்லை திரைபடத்தில் சுகந்திரம் என்று ஒருவருக்கு பெயர் வைத்து படம் முழுவதும் வலம் வருமாறு செய்திருப்பார் டைரக்டர். படத்தில் சுகந்திரம் வந்தாச்சா,போயாச்சா,என்ன செய்யுது என்ற தொனியில் வசனம் அனைவரையும் சிந்திக்க செய்தது.
கடந்த சில வாரங்களாக இந்திய அரசின் செயல்பாடுகள் மிகுந்த ஆச்சர்யமாகவும் மக்களால் தேர்தெடுக்கபட்ட அரசுதானா என கேள்வி எல்லோர் மனதிலும் எழுகிறது. இதை மெய்யாகும் பொருட்டு, கடந்த வாரம் சில உடன்பாடுகளுக்கு மத்திய அமைச்சரவை அவசரமாகவும்,ரகசியமாகவும் கைஎளுதிட அனுமதிஅளிதிருகிறது.
ரகசியமாகவும்,அவசரமாகவும் எந்த ஒரு அறிவிப்பும் செய்யாமல் மேஜைகளுக்கு அடியில் கையெழுத்திட வேண்டிய அவசியம் என்ன?!? எந்த ஒரு திட்டமும் ஆடம்பரமாக அமர்களம் செய்வது தான் அரசின் செயல்பாடு, இதற்கு மட்டும் ஏன் இந்த மௌனம் ,மிகவும் இரகசியமாய் செய்ய இது ஒன்றும் நம் விட்டு தேங்காய் யல்ல, 100 கோடி இந்தியர்களின் இதயம் சர்த்த விஷயம்.
கடந்த வாரம் அமெரிக்காவுடனான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை வெளியில் தெரியாதவண்ணம் ஒப்புதல் வழங்கியிருக்கிறது.
அடுத்த மாதம் கையொப்பமிடப்பட இருக்கும் விவசாயக் கூட்டுறவு மற்றும் உணவுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தின்படி விவசாய விரிவாக்கத்தில் தனியார்மயத்தைப் புகுத்துவதும் இந்திய வேளாண்மையில் அமெரிக்க விவசாயப் பன்னாட்டு நிறுவனங்கள் பங்குபெறுவதும் அனுமதிக்கப்பட இருக்கிறது.
யாருடைய நன்மைகளை கருதி இரகசியமாய் இந்த உடன்பாடு,ஏன்,எதற்காக இபடீல்லாம் நடந்து கொள்கிறது.
விலைவாசி உயர்வு, நிதிநிலை அறிக்கைகள், இடைத்தேர்தல்கள்,அன்றாட அரசியல் நிகழ்வுகளை , மானட மயிலாட,ஜோடி நோ. 1 ஆகிய வற்றை மையப்படுத்திச் செயல்படும் மீடியாக்களும் சரி, நமது எதிர்க்கட்சிகளும் சரி, அவ்வப்போதைய பரபரப்புகளை விலைபேசி, தங்களது வாடிக்கையாளர்களையும் வாசகர்களையும் தேசத்தை எதிர்நோக்கும் அடிப்படைப் பிரச்னைகளைப் பற்றிச் சிந்திக்கவே அனுமதிக்காமல் செயல்படும் ஊடகங்களும் சரி, மத்திய அரசின் முடிவுகளால் கேள்விக்குறியாகப்போகும் இந்திய விவசாயிகளின் வருங்காலத்தைப் பற்றிய கவலையே இல்லாமல் இருப்பது அதைவிட ஆச்சர்யம் அள்ளிகிறது.
அமெரிக்காவில் விவசாயம் என்பது வியாபாரம். இந்தியாவிலோ விவசாயம் என்பது ஒரு மனிதனின் வாழ்வாதாரம்.
இந்திய விவசாயி வியாபாரநோக்கில் தனது வயலில் உழுது பயிரிட்டு சாகுபடி செய்வதில்லை.
தனது வயிற்றுப்பிழைப்புக்காக, தனது குடும்பத்துக்கான முலதனமகதான் விவசாயம் செய்கிறார்.
இவரது விவசாயம் லாபநோக்கில் நடத்தப்படவில்லை என்பதைக் காரணம் காட்டி இந்த விவசாய நிலங்களை
பன்னாட்டு நிறுவனங்கள் மொத்தமாக வாங்கி லாபகரமாக விவசாயம் செய்ய வழிவகுப்பதுதான் இந்த ஒப்பந்தத்தின் நோக்கம்.

மேலும், மரபணு மாற்றப்பட்ட விதைகளை அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்களின் உடைமையாகிவிட்ட நிலங்களில் பயிரிடுவது எளிமையாகும்.
இந்திய-அமெரிக்க விவசாய அறிவுசார் அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டு அதில் கர்க்கில், மான்சாண்டோ போன்ற மரபணு மாற்றப்பட்ட
விதைகளை உற்பத்தி செய்யும் அமெரிக்க தனியார் பன்னாட்டு நிறுவனங்கள் உறுப்பினர்களாக இருக்க வழிகோலப்பட்டுள்ளது.
இந்த அமைப்புகளில் இவர்கள் உறுப்பினர்களானால் நேரடியாகவே அரசின் மீது தங்களது செல்வாக்கைச் செலுத்துவது தவிர்க்க முடியாததாகிவிடும்.

ஒரு சர்வாதிகார ஆட்சியில்கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒரு ராட்சத சட்டத்தையும் இந்தப் பன்னாட்டு மரபணு மாற்றப்பட்ட விதைகளை விநியோகம் செய்யும் நிறுவனங்கள் நமது ஆட்சியாளர்களின் உதவியுடன் நம்மீது திணிக்க இருக்கிறார்கள். உயிரி தொழில்நுட்பவியல் ஒழுங்காற்று ஆணையச் சட்டம் ஒன்றை நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மத்திய அரசு நிறைவேற்ற இருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
நம்மை விடுங்கள். நமது நாடாளுமன்ற உறுப்பினர்களில் எத்தனை பேர் கவலைப்படுகிறார்கள்?

முறையான சாட்சியம் அல்லது விஞ்ஞான ஆய்வின் அடிப்படையில் அல்லாமல் மரபணு மாற்ற விதைகள் போன்ற புதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் பற்றித் தவறான பிரசாரத்தில் ஈடுபட்டு மக்களைத் திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபடுவோர் மீது இந்தச் சட்டம் பாயும். இந்தச் சட்டமுன்வரைவின் 13(63) -வது பிரிவின்படி, புதிய அறிமுகங்களுக்கு எதிராகத் தக்க ஆதாரம் இல்லாமல் பிரசாரம் செய்பவர்கள் குறைந்தது 6 மாதம் முதல் ஓராண்டு சிறைத்தண்டனை பெறுவதுடன், 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுவார்கள்.

விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரித்தொழில்நுட்பவியல் துறையினரால் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் இந்தச் சட்ட முன்வரைவின் 27(1) பிரிவின்படி, மரபணு மாற்றப்பட்ட பொருள்களின் ஆராய்ச்சி, அனுமதி போன்ற விஷயங்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் பார்வைக்கு உள்படுத்தப்படுவது மறுக்கப்படுகிறது. மேலும், மரபணு தொடர்பாக எந்தவொரு மாநிலத்தின் முடிவையும் நிராகரிக்கும் உரிமை உயிரித் தொழில்நுட்பவியல் துறையால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட குழுவுக்கு இருக்கும் என்கிறது இந்தச் சட்ட முன்வரைவு.
யாருக்காக இது யாருக்காக!
காந்தி 1947 இல் சுகந்திரத்தை மட்டும் வங்கிதரவில்லை, சுயமரியாதையும் , சுய தொழில் முறைகளயும் கற்று கொடுத்திருக்கிறார்! உப்பு, துணி, விவசாய மற்றும் உற்பத்தி தொழில் களில் சுய அபிவிருத்தியும் சுகந்திரமும் பெற்று தந்திருக்கிறார்.
இவை அனைத்தும் மற்று வழியில் அடகு வைக்க படுகின்றன,தனி மனிதர்களுக்காக!?!

Friday, February 12, 2010

யாமறிந்த மொழிகளிலே தமிழ் போல் இனிதாவது எங்கும் அறியோம்!

கவிதையும் கற்று மற!


இந்த வலை தளம் வழியாக நான் தினமும் படித்த,ரசித்த சந்திந்த நபர்களை பற்றி எழுத விழைகிறேன்!
சந்திப்போம்!!!
பிரபாகர பிரபு